காலை முதல் மாய்ந்து மாய்ந்து வேலை செய்த களைப்பின் மிகுதியால் ஓய்ந்து போய் படுக்கையில் வீழ்ந்தான் பக்கீர் முஹம்மது. மனதில் பெரும் அயர்ச்சியுடன் நினைவுகளை அசை போட்டுக்கொண்டிருந்தான் மதியம் உணவு இடைவேளை நேரத்தில் ஊரில் இருந்து தனது மூத்த மகளிடம் இருந்து வந்த அழைப்பு அவனது காதில் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தது "வாப்பா இன்னும் 3 வருடங்கள்பொறுத்து வாங்க வாப்பா அதுக்குள்ளே நான் படிப்பை முடித்து விடுவேன் நீங்க யாரை பற்றியும் கவலைப்படாதீங்க அம்மா நல்ல விதமாக இருக்காங்க தம்பியும் தங்கையும் நல்லா படிக்கிறாங்க எல்லோரையும் நான் பார்த்து கொள்கிறேன் என்ற குரல் திரும்ப திரும்ப காதில் ஒலித்துக்கொண்டேயிருந்தது. மகளை நினைத்து பெருமைபடுவதா அல்லது தன் நிலைமையை நினைத்து அழுவதா என்று மனம் தடுமாறியது.
khuroojnihaay.blogspot .com
Friday, April 20, 2012
Thursday, April 12, 2012
நமது சமுதாயத்தில் படிப்பு..!!! சகோ. அபூரய்யான்
இது நாம் மிகவும் சிந்திக்க வேண்டிய விஷயம், பெருகிவரும் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தீனி போடும் சமூகமாக நம சமுதாயம் மாறிவிட்டது, பொறியியல் கல்லூரியில் ஆணையும் பெண்ணையும் சேர்ப்பது என்பது "சமூக கவுரவமாக" (Social status) பெற்றோர்கள் எண்ணுகின்றனர், Professinal Courses படித்தால் தான் வேலை என்ற மாயை மக்களை ஆட்டிப்படைக்கிறது அல்லது தன் பிள்ளையும் அமேரிக்கா ஆஸ்திரேலியா போகவேண்டும், தான் இங்கே தனியே கிடந்து மாளவேண்டும் என்று பெற்றோர்களே விரும்புகின்றனர்
இது என் வெளிநாட்டு சகோதரர்களுக்காக.... சகோ. எம். யூசுஃப்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹு...
இது நான் 2 மாதத்துக்கு முன்பாக எழுதியது, மீண்டும் உங்கள் பார்வைக்காக... இவை யாரையும் புண்படுத்தும் எண்ணத்தில் எழுதியது அல்ல... எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே, இது என் வெளிநாட்டு சகோதரர்களுக்காக....
இன்று நான் ஒரு பெரியவரை சந்தித்தேன். அவர் நமதூரில் ஒரு பிரபல புள்ளி. எனது வாப்பாவின் வயது அவருக்கு. அவருடைய மகனும் நல்ல படித்து வெளிநாட்டில் கை நிறைய சம்பளம் வாங்குகின்றார் அல்ஹம்துலில்லாஹ். இவர்களுக்கு தெருவில் ஒரு வீடும், சில காலம் முன்பு ஊருக்கு வெளியிலும் புதிய வீடு கட்டி குடியேறியுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ் இவர்களுக்கு பொருளாதாரத குறை ஏதும் கொடுக்கவில்லை.

Wednesday, April 11, 2012
இருபதாம் நூற்றாண்டில் முஸ்லிம்களின் நிலை (தொடர்ச்சி) 3 சகோ. அபூ ஹாஷிமா
அத்தியாயம் - மூன்று
*****************************
இதை நான் தொடராக எழுதவில்லை. என் கருத்தை சொல்லிவைக்கலாம் என்றுதான் ஆரம்பித்தேன். நண்பர்கள் பலர் அதை தொடர் என்று எண்ணி நிறைய எதிர்பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது.அவர்கள் வேதனையின் உச்சமும் தெரிகிறது. வறுமை,வேதனை மற்றும் இக்கட்டுகளில் இருந்து விடுபட முடியாத ஏராளமான இளகிய உள்ளங்கள் வெயில் தேசத்தின்
பாலை அடுப்புகளுக்கு விறகாகிக் கொண்டிருப்பதை நான் அறிவேன். தங்கள் துன்பங்களை துயரங்களை நம்மில் ஒருவர் பகிர்ந்து கொள்கிறார் என்பதை
எண்ணி அவர்களுக்கு ஒரு நெகிழ்ச்சியும் ஆறுதலும் ஏற்படுகிறது.அந்தத் துன்பங்களை அனுபவித்த அனுபவசாலிகளில் நானும் ஒருவன் என்பதால்
சகோதரர்களின் இன்பதுன்பங்களை அவர்களோடு பகிர்வதில் எனக்கும் ஒரு ஆறுதல்தான்.

ஏழ்மையிலிருந்து ஆடம்பரத்துக்கு மாறுவார்கள்” சகோ. ஜெய்னுதீன்
ஊருக்கு சென்ற மாதங்களில் மட்டுமே வாழவதவும் மிதமுள்ள நாட்களில் சாவதாகவும் நினைக்கும் நினைப்பு முதலில் மாற்றப்பட வேண்டும்...
உண்மை நிலை நம் குடும்பத்தாருக்கும் தெரிவிக்கப்பட வேண்டும்அதனால் அவர்களும் நம்மோடு கைகோர்த்துக் கொண்டு ஆதரவாக வாழ்வார்கள்...அது நமக்கு நிச்சயம் வெற்றியை தரும்
உண்மை நிலை நம் குடும்பத்தாருக்கும் தெரிவிக்கப்பட வேண்டும்அதனால் அவர்களும் நம்மோடு கைகோர்த்துக் கொண்டு ஆதரவாக வாழ்வார்கள்...அது நமக்கு நிச்சயம் வெற்றியை தரும்
தவறு எங்கே இருந்து ஆரம்பமாகிறது? சகோ. முஹம்மது ஃபைஸல்
இன்றைக்கு பலர் ஊரில் போய் செட்டில் ஆவதற்கு தயங்க இன்னொரு முக்கியமான காரணம் உறவினர்கள். இவர்கள் 'முடித்து'க் கொண்டு வருகிறார்கள் என்றவுடன் 'இழவு' விழுந்தது போல பதறுகிறார்கள். அதற்கான காரணம் அவர்கள் புறமிருந்து உள்ளதை ஏற்கனவே பார்த்தோம்.
இன்னொரு முக்கியமான காரணம் யார் என்றால், அது வெளிநாட்டில் வாழும் நம்மைப் போன்றோர்தான். நம்மில் பலருடைய குடும்பத்தினருக்கு (பெரும்பாலன கேஸ்களில் மனைவிக்குக் கூட) நாம் என்ன வேலை செய்கிறோம், இங்கு படும் அவலங்கள் என்ன என்பன, சம்பளம், கம்பெனி நிலைமை போன்றவை தெரியாது.
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஊருக்குச் செல்லும்போது 10 ரியால் கடையில் போய் 'அள்ளி'க் கொண்டு போவதை வைத்தக்கொண்டு பண்ணுகிற அலம்பல்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

வளைகுடா சகோதரர்களின் பலதரபட்ட கருத்துக்கள்...
Bava Sulaiman A Said: அல்ஹம்துலில்லாஹ்.... சிறப்பான ஒரு தலைப்பு.... அனால் மனதில் உள்ளதை எல்லாம் கொட்டி தீதுரலாம் என்றும் தோணுது.. முடிவு எடுக்க தைரியம் இல்லாமல் எதை கொட்டி என்ன செய்ய முடியும்.... போவது வரை போவட்டும் என்ட மனநிலைக்கும் தள்ளப்பட்டு விட்டேன் எண்டே நினைகிறேன்....எந்த கமிட்மென்ட் இல்லாமல் சவுதி வந்தாலும்... இப்போ வாழ்கையே கமிட்மென்ட் ஆகிவிட்டது..... அதனால் ஏற்பட்ட பயம்..... மனதில் பிசாஸாய் பயமுறுத்துது.. இதுவரை துனியா வாழ்வில் yettam தந்த இறைவன் அகிரதுக்கும் பொறுப்பாளன்....
@Mohideen Rasheed Said: ஊரில் செட்டிலாவது என்பதை அப்படிப் பொத்தாம் பொதுவாகப் பார்க்க இயலாது. மொத்தக் குடும்பமும் ஊரில் இருக்க, வருடத்திற்கோ அல்லது வருடங்களுக்கோ ஒருமுறை பஜாரில் அலைந்து திரிந்து முப்பத்திச் சொச்சம் கிலோ 'பாரீன்' சாதனங்களை அள்ளிப்போட்டு அரக்கப் பரக்க ஊருக்குப் போய் கொண்டுபோன நகை நட்டுக்களை பாதுகாப்பாகப் பணயம் வைத்துவிட்டு மறுபடி வந்து மிச்சத் தாம்பத்தியத்தை voip ல் தொடரும் மெழுகுவர்த்திகள் ஒருவகை
Tuesday, April 10, 2012
வெளிநாட்டு மோகம் ஒழியட்டும்.... சகோ. முஹம்மது யூசுஃப்
எல்லா சகோதரர்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு...
முதலில் எல்லாம் வல்ல அல்லாஹ்வை புகழ்ந்தவனாக, அவனது சாந்தியும், சமாதானமும் நபியே கரீம் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தார் மீதும், சத்திய சஹாபாக்கள் மீதும் மற்றும் நம் எல்லோர் மீதும் உண்டாகட்டுமாக என்று பிரார்த்தித்தவனாக ஆரம்பம் செய்கின்றேன்.
சகோதரர் பகருதின் முஹம்மது அவர்கள் சொன்னதுபோல் எல்லோருக்கும் ஊரில் போயி செட்லே ஆவனும்னு ஒரு நிய்யத்து உண்டு.
ஆனாலும் மணமும், பணமும் இடம் கொடுப்பதில்லை.

இருபதாம் நூற்றாண்டில் முஸ்லிம்களின் நிலை தொடர்ச்சி (2).... சகோ. அபூ ஹாஷிமா
1960 வருட வாக்கில் துபாய் நாட்டுக்கு நம்மவர்கள் காலடி எடுத்து வைக்க ஆரம்பித்தார்கள். அதுவே லேட்டுதான்.அதற்கு முன்னரே மேலை நாட்டவர்களும் இந்தியாவின் உயர் ஜாதி இந்துக்களும் அங்கே காலூன்றி விட்டார்கள். அவர்களின் எடுபிடிகளாகவும் அல்லது அவர்களின் ஆளுமையின் கீழும் முஸ்லிம்கள் வேலை செய்தார்கள். சில வருடங்களில் அரபு நாடு தமிழ் முஸ்லிம்களின் மற்றொரு சிங்கப்பூர் மலேசியாவாகிவிட்டது. சிங்கப்பூர்வாசிகளைப் பார்த்து ஏக்கப்பார்வை பார்த்தவர்கள் வேட்டியை மாற்றி கால்சராயைப் போட்டுக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள். 1970 க்குப் பிறகு கொஞ்சம் கூடுதல் மக்கள்போய் துபாயை பிரபலமாக்கி விட்டார்கள். நமக்கு முன்னால் அங்கே போய் பழம் தின்று கொட்டையும் போட்ட மலையாளிகளுக்கு இது பெருங்கடுப்பு. அவர்களோடு போட்டிப் போட்டுத்தான் நம்மவர்கள் படிப்படியாக உயர முடிந்தது.அப்புறம் நடந்த நிகழ்வுகள் முஸ்லிம் சமுதாயத்தில் உச்சகட்ட மாற்றங்களை ஏற்படுத்தியது.
இருபதாம் நூற்றாண்டில் முஸ்லிம்களின் நிலை..... சகோ. அபூ ஹாஷிமா
இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் பலர் சிங்கப்பூர்,மலேசியா, இலங்கை,ரங்கூன் போன்ற நாடுகளுக்கு "திரை கடலோடி திரவியம் தேடச் சென்றார்கள். அப்படிப் போன பலபேருடைய குடும்பம் "நல்லா" இருந்தது. அவர்கள் "ஜக்காத்" கொடுத்தார்கள்.மற்றவர்கள் வாங்கினார்கள்.அவர்கள் "ஹஜ்" செய்தார்கள், மற்றவர்கள் அவர்களை "ஹாஜியாரே" என்று அழைத்தார்கள். அவர்கள் புதிய வீடு கட்டினார்கள்., ,கார் வாங்கினார்கள்,பிள்ளைகளை டாக்டராகவும் இஞ்சினியராகவும் படிக்க வைத்தார்கள். வயல்,தோப்பு, மனைகள் வாங்கிப் போட்டார்கள்.
அந்தக்குடும்பங்களில் பல குடும்பங்கள் இன்றும் நல்ல நிலையில் இருக்கின்றன. அவர்களுக்கு சமுதாயத்தில் அந்தஸ்து வழங்கப் பட்டது.சென்ற இடமெல்லாம் அவர்களை கவுரவிக்க பலர் காத்திருந்தார்கள்.அங்கேஅவர்களின் "பணம்" அவர்களின் தகுதியைப் பேசியது.பலர் அவர்களை அண்டி வாழ்ந்தார்கள், மற்றும் சிலர் அவர்களைப் பார்த்து பொறாமைப் பட்டார்கள். தங்களுக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காது என்பதே அதற்குக் காரணம். ஏனென்றால் சிங்கப்பூர், மலேசிய நாடுகளின் கதவுகள் அடைபட்டு விட்டன. புதிதாக யாரும் அங்கே போக முடியாது. உள்ளூரில் அந்த "முதலாளிகளின்" கடைகளில் பலர் வேலைப் பார்த்தார்கள். பெரும்பாலான மக்கள் கூலி வேலையும் "சாப்பாடு கழிந்தால் போதும்"என்ற அளவுக்கு வருமானமுள்ள வேலையும் பார்த்தார்கள்.
வெளிநாடு வாழ்/வாழ்ந்த சகோதரர்களுக்கு! சிந்தனையாளர்களுக்கு... சகோ. ஜெய்னுதீன்
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்புள்ள வெளிநாடு வாழ்/வாழ்ந்த சகோதரர்களுக்கு! சிந்தனையாளர்களுக்கு!
வெளிநாடுகளில் வாழும் நம் எல்லோரும் பல விதமான வேலைகளில் இருந்தாலும், பல தரப்பட்ட ஸடேட்டஸ்களிலிருந்தாலும், பல ஏற்றத்தாழவுகளுடனான சம்பளத்திலிருந்தாலும், நாம் எல்லோருமே ஒரே ஒரு விசயத்தில் மட்டும் நாம் ஒரே சிந்தனையிலிருக்கிறோம் அது என்றாவது ஒரு நாள் நாம் நம்முடைய நாட்டில் செட்டிலாகிவிடலாம் என்று..
ஆனால் அது நம்மில் பலரும் அதை நாளை..நாளை என்று தள்ளிப்போடப்பட்டு வருடங்கள் பல கடந்துவிட்டது, அதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
வெளிநாடுவாழ் சகோதரர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்..! சகோ. அபுரய்யான்
அன்பு சகோதரர்களே..!!!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ..!!
வெளிநாடுகளில் வாழும் நாம் சாதிப்பதை விட அல்லது சம்பாதிப்பதைவிட, நாம் இழப்பது நம் வாழ்வின் உன்னதமானபல விஷயங்களை, பல சந்தர்பங்களை குடும்பத்தை விட்டு இங்கு வந்து தனிமையில் வாடும் இதயங்கள் பல, இதை சொல்லும்போது பலரின் பதில் "குடும்பத்தை" கொண்டு வந்துர வேண்டிய தானே, ஆக நம் பார்வையில் "குடும்பம்" என்பது மனைவி, மக்கள் என்ற ஒரு சின்ன வட்டத்துக்குள் ஒதுங்கிவிட்டது ஆனால் உணமையில் குடும்பம் என்பது தாய் தந்தை சகோதர சகோதரிகள் என்று பறந்து விரிந்த ஒரு பொக்கிஷம்

இக் குழுமம் பற்றிய ஒரு அறிமுகம்....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...!
அன்புச்சகோதரர்களே... இந்த குழுமம் தொடங்கப்பட்டுள்ள காரணம் நாம் அனைவரும் அறிந்ததே... இருப்பினும் சுருக்கமாக ஓரிரு வார்த்தைகளில் இதை சொல்ல விரும்புகிறேன்....
"திரை கடல் ஓடியும் திரவியம் தேடு" பள்ளியில் சொல்லி கொடுத்துவிட்டதாலோ என்னவோ அதையே வேத வாக்காக எடுத்துக்கொண்டு நாம் வந்து விட்டோம்...

Subscribe to:
Posts (Atom)