Pages

Thursday, April 12, 2012

இது என் வெளிநாட்டு சகோதரர்களுக்காக.... சகோ. எம். யூசுஃப்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹு...
இது நான் 2 மாதத்துக்கு முன்பாக எழுதியது, மீண்டும் உங்கள் பார்வைக்காக... இவை யாரையும் புண்படுத்தும் எண்ணத்தில் எழுதியது அல்ல... எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே, இது என் வெளிநாட்டு சகோதரர்களுக்காக....


இன்று நான் ஒரு பெரியவரை சந்தித்தேன். அவர் நமதூரில் ஒரு பிரபல புள்ளி. எனது வாப்பாவின் வயது அவருக்கு. அவருடைய மகனும் நல்ல படித்து வெளிநாட்டில் கை நிறைய சம்பளம் வாங்குகின்றார் அல்ஹம்துலில்லாஹ். இவர்களுக்கு தெருவில் ஒரு வீடும், சில காலம் முன்பு ஊருக்கு வெளியிலும் புதிய வீடு கட்டி குடியேறியுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ் இவர்களுக்கு பொருளாதாரத குறை ஏதும் கொடுக்கவில்லை.

இன்று இந்த பெரியவர் எனது வீட்டுக்கு, எனது வாப்பாவின் நலம் விசாரிக்க வந்தார். வந்த இடத்தில அவரிடம் எனது உம்மா கேட்டார்கள், வீட்டில் உங்களுடைய மனைவி நலமா என்று? அந்த பெரியவர் சொன்ன விசயங்கள் மிக கவலை அளிப்பதாக இருந்தது.


அவர் கூறினார்....
ஆமா... அவ இருக்கிறா வீட்டில... நம்மள யார் பார்க்கிறது, நம்மள நம்மளே பார்திக்கிற வேண்டியதுதான்னு... அவர் விரக்தியான சிரிப்புடன் கூறினார், நம்ம வீட்டுக்காரிக்கும் உடம்பு நல்ல முறையில் இல்லை, பெரிய வீடு, பார்க்கிறதுக்கும் யாரும் இல்லை, அதனால அவளை வீட்டில் வைத்து வெளியில் பூட்டிவிட்டு வெளியில் செல்கிறேன் என்று. மேலும் கூறினார், இப்பம் உள்ள பிள்ளைகள் நம்மள பார்துக்குவாங்கன்னு சொல்லவே முடியாது. கூடிப்போன கல்யாணம் ஆகி மூன்று மாசம், அதற்கப்புறம் மனைவியோடு வெளிநாடு சென்றுவிடுவார்கள் என்று. அவருடைய ஒரே மகனும் நல்ல முறையில் வெளிநாட்டில் குடும்பதோடி உள்ளார். இங்கு நாம் கவலையுடன் கவனிக்க வேண்டிய விஷயம், நாம் உண்மையிலயே பாக்கியவாங்களா என்று???


நமது நபி முகம்மது ஸல் அவர்கள் கூறினார்கள், பெற்றோரில் இருவருமோ அல்லது ஒருவரோ உயிரோடு இருந்து, அவர்களுக்கு பணிவிடை செய்து எவனொருவன் சுவர்க்கம் செல்ல தகுதி பெற வில்லையோ அவனைவிட துர்பாக்கியசாலி யார் என்று.


இப்போது சொல்லுங்கள் எனதருமை வெளிநாட்டுவாழ் சகோதரர்களே, நம்மில் எத்துனை பேர் பாக்கியசாலி என்று???


ரசூல் ஸல் அவர்கள் கூறினார்கள் பெற்றோரின் பொருத்ததில் அல்லாஹ்வின் பொருத்தம் உள்ளது என்று. மேலும் கூறினார்கள் பெற்றோரின் கோபத்தில் அல்லாஹ்வின் கோபம் உள்ளது என்று.


இப்போது சிந்தியுங்கள் நம்மில் எத்தினை பேர் பெற்றோரை திருப்தி படுத்துகிறோம். நம்மில் சிலர் சொல்வார்கள் மாத மாதம் அவர்களுக்கு பணம் அனுப்புகின்ரேனே என்று . நாம் முதுமை அடையும்போது தெரியும் நமக்கு பணம் தேவையா அல்லது பாசம் தேவையா என்று. இப்போது சிலர் சொல்ல கூடும், அப்படின்னா எங்களை பணம் சம்பாதிக்காமல் அவர்களுக்கு மட்டும் சேவை செய்ய சொல்கிறீர்களா என்று. யாரும் பணம் ஈட்ட வேண்டாமென்று சொல்வதில்லை. ஆனால் அதை விட முக்கியம் பெற்றோரை பேணுவது என்பது. சிலர் கேக்கக்கூடும் நாங்கள் இந்தியாவில் வந்து என்ன செய்வது என்று. இன்ஷா அல்லாஹ் வாருங்கள் நல்ல நிய்யத்துடன் அல்லாஹ் உங்களுக்கு வாழ்வளிப்பான். நம்மை சுற்றி எவ்வளோ சமுதாயம் உள்ளது அவர்களெல்லாம் வெளிநாடு சென்றா பணம் ஈட்டுகிறார்கள். இந்தியாவில் பணம் சம்பாதித்து குடும்பதோடி சந்தோசமாய் உள்ளனர்.


எனவே இன்ஷா அல்லாஹ் முடிவு செய்யுங்கள் நாம் கட்டிய வீட்டில், நமது குடும்பத்தோடு சந்தோசமாக வாழ்வதா அல்லது உம்மா வாப்பாவை தனியாக விட்டுவிட்டு வெளிநாடு சென்று இருப்பதா என்று.


எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கும் நம் குடும்பத்திற்கும் அருள் புரிவானாக.

No comments:

Post a Comment