காலை முதல் மாய்ந்து மாய்ந்து வேலை செய்த களைப்பின் மிகுதியால் ஓய்ந்து போய் படுக்கையில் வீழ்ந்தான் பக்கீர் முஹம்மது. மனதில் பெரும் அயர்ச்சியுடன் நினைவுகளை அசை போட்டுக்கொண்டிருந்தான் மதியம் உணவு இடைவேளை நேரத்தில் ஊரில் இருந்து தனது மூத்த மகளிடம் இருந்து வந்த அழைப்பு அவனது காதில் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தது "வாப்பா இன்னும் 3 வருடங்கள்பொறுத்து வாங்க வாப்பா அதுக்குள்ளே நான் படிப்பை முடித்து விடுவேன் நீங்க யாரை பற்றியும் கவலைப்படாதீங்க அம்மா நல்ல விதமாக இருக்காங்க தம்பியும் தங்கையும் நல்லா படிக்கிறாங்க எல்லோரையும் நான் பார்த்து கொள்கிறேன் என்ற குரல் திரும்ப திரும்ப காதில் ஒலித்துக்கொண்டேயிருந்தது. மகளை நினைத்து பெருமைபடுவதா அல்லது தன் நிலைமையை நினைத்து அழுவதா என்று மனம் தடுமாறியது.
5 ஆண்டுகள் கழித்து 6 மாத விடுப்பில் ஊருக்கு போகாலாம் என்று சந்தோஷமாக ஊருக்கு தகவல் சொன்னவனுக்கு அடுத்த நாள் வந்த அதிரடியான வேண்டுகோள்... அதுவும் அவனது உயிரான மூத்த மகள் எதுவும் சொல்ல முடியவில்லை மனதில் சோகம் அப்பிக்கொண்டது அழவும் முடியவில்லை திரும்பி பர்த்தான் அறையில் நண்பர்கள் இண்டெர்நெட்டில் மும்முரமாக மனைவியுடன் "Voip" ல் வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தார்கள்.
என்னய்யா வாழ்க்கை இது, குடும்பத்தவர்களுக்காக வாழ்க்கையை குறிப்பிட்ட காலம் தியாகம் பண்ணலாம் அதற்காக நான் தியாகியாகவே வாழ்ந்துகொண்டிருந்தால் என்னை நம்பி என்னுடன் வாழ வந்தாளே அவளுடைய வாழ்க்கையும் என்னை பொத்தி பொத்தி வளர்த்தார்களே தான் சாப்பிடாவிட்டாலும் உள்ளதை எனக்கு வைத்து விட்டு பட்டினியாக கிடப்பாளே என் தாய், நான் எதை கேட்டாலும் எப்படியாவது வாங்கி கொண்டுவந்து என் முகத்தில் சந்தோஷத்தை பார்ப்பதையே விரும்பும் எனது தந்தை அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளும் இருக்கிறதே வயதான காலத்தில் நான் அருகில் இருக்க வேண்டும்.... உன்னை பார்த்து 5 வருஷம் ஆச்சுப்பா... என் கண்ணிலேயே நிக்கிறே வாப்பா....ஒரு முறை வந்துட்டு போயேன் என்று உம்மா தொலைபேசியில் கண்கலங்கினாளே.... பாசப்போராட்டத்தில் மனம் விம்மியது அழுதான்... மனம் இலேசாகும் வரை அழுதான். அப்படியே உறங்கி போனான்.
அறை நண்பர்கள் அடிக்கடி அவனை திரும்பி பார்த்துக்கொண்டிருந்தார்கள். யாரும் சமாதானம் சொல்ல முன் வரவில்லை அவர்களும் அழுது ஓய்ந்து போனவர்கள்தாம்.....
ஆக்கம்: சகோ. அபூஃபைஸல்

No comments:
Post a Comment