Bava Sulaiman A Said: அல்ஹம்துலில்லாஹ்.... சிறப்பான ஒரு தலைப்பு.... அனால் மனதில் உள்ளதை எல்லாம் கொட்டி தீதுரலாம் என்றும் தோணுது.. முடிவு எடுக்க தைரியம் இல்லாமல் எதை கொட்டி என்ன செய்ய முடியும்.... போவது வரை போவட்டும் என்ட மனநிலைக்கும் தள்ளப்பட்டு விட்டேன் எண்டே நினைகிறேன்....எந்த கமிட்மென்ட் இல்லாமல் சவுதி வந்தாலும்... இப்போ வாழ்கையே கமிட்மென்ட் ஆகிவிட்டது..... அதனால் ஏற்பட்ட பயம்..... மனதில் பிசாஸாய் பயமுறுத்துது.. இதுவரை துனியா வாழ்வில் yettam தந்த இறைவன் அகிரதுக்கும் பொறுப்பாளன்....
@Mohideen Rasheed Said: ஊரில் செட்டிலாவது என்பதை அப்படிப் பொத்தாம் பொதுவாகப் பார்க்க இயலாது. மொத்தக் குடும்பமும் ஊரில் இருக்க, வருடத்திற்கோ அல்லது வருடங்களுக்கோ ஒருமுறை பஜாரில் அலைந்து திரிந்து முப்பத்திச் சொச்சம் கிலோ 'பாரீன்' சாதனங்களை அள்ளிப்போட்டு அரக்கப் பரக்க ஊருக்குப் போய் கொண்டுபோன நகை நட்டுக்களை பாதுகாப்பாகப் பணயம் வைத்துவிட்டு மறுபடி வந்து மிச்சத் தாம்பத்தியத்தை voip ல் தொடரும் மெழுகுவர்த்திகள் ஒருவகை
நீண்டகாலம் குடும்பத்தோடு - முற்றிலும் மாறுபட்ட, மேம்பட்ட சூழ்நிலையில் படித்து வளர்ந்த குழந்தைகளுடன் - ஊருக்குப் போய், அந்நிய சூழலில்(குழந்தைகளுக்குப் பரிச்சயமாகிவரும்வரை) செட்டிலாவது ஒருவகை. வெளிப்படையான காரணங்களுக்க்காக (Obiviuos reasons) முதற்பிரிவினருக்கு ஊரில் செட்டிலாக வேண்டும் என்ற கட்டாயம் அதிகம் இருந்தாலும் நடப்பதென்னவோ, ஜெயும் சசியும் நிரந்தரமாகப் பிரிந்து சென்ற அடுத்த நாள்தான். ஏன் எதற்க்கு எப்படி என்று அலசுவது ஒரு பெரிய கட்டுரையாகவே முடியும்.
@Baharuddin Mohamed Sainuddin Said: சகோதரர் ரஷீத் அவர்களின் கருத்து வரவேற்க்கத்தக்கது.... இந்த கருத்துக்க்கணிப்பின்/ஆலோசனைக்ளின் முடிவுகள் திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில் அவ்ற்றின் நல்லதை தொகுத்து நாம் ஒரு புத்தகமாகவே வெளியிடலாம் ...எனவே அன்பு சகோதரர்களே! Bava Sulaiman A Mohamed Faisel Peer Mohamed Abdul Wahid உங்கள் கருத்துக்களையும் மற்ற்வர்கள் கருத்துக்கள் பற்றிய உங்கள் அபிபிபிராயங்களையும் குறைபாடுகளையும் எழுதுங்கள்...உங்கள் நன்பர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்...
@Shaik Mohamed Anas said: பணம் தேவையான அளவு சம்பாதித்து தன்னிறைவு பெற்றவர்கள் துணிந்து முடிவு எடுத்து முயற்சிக்கலாம். இன்ஷா அல்லாஹ் வெற்றி பெறவும் செய்யலாம். ஆனால், நடுத்தர குடும்பத்து நண்பர்கள், சகோதரர்கள் மிகவும் ஆலோசித்துதான் முடிவு எடுக்க வேண்டும். அதுவும் வியாபாரம் தொடங்க நினைப்பவர்கள் "சந்தை நிலவரங்களை" மிக கவனத்தோடு பார்க்க வேண்டும். தொழில் துறை பட்டம் பெற்றவர்களும் துணிந்து முயற்சிக்கலாம்.
@Baharuddin Mohamed Sainuddin said: @Shaik Mohamed Anas தங்கள் பதிவிற்க்கு நன்றி!,நல்ல பதிவு, அல்லாஹ் அருட்செய்வானாக!
#பணம் தேவையான அளவு சம்பாதித்து தன்னிறைவு பெற்றவர்கள் # நம் சகோதரர்களின் பிரச்சனையே இதை வரையறுப்பதில்தான் என்று நினைக்கிறேன். தன்னிறைவு பெற்றேன் என்று எப்போது நாம் சொல்வோம்...அப்படி நினைப்பதற்க்கு முன்பாக வேறு ஒரு கமிட்மெட் வருகிறதே அது மருத்துவச்செலவாகட்டும்,உறவுகளின் (ஆடம்பர) திருமணமாகட்டும், சொந்த வீடு இருக்க, புதிய வீடு ஒன்று கட்டி வாடகைக்கு கொடுக்கும் எண்ணத்துடன் அல்லது பக்கத்து மனையை வழைத்துப் போடலாம் என்ற மனைவியின்/உறவுகளின் நச்சரிப்பினால் அல்லது ரியஸ் எஸ்டேட் கார்களின் திருகுதளத்திற்க்கு மயங்கி புதிய அட்வான்ஸ் கொடுப்பதாகட்டும், இப்படி அதிகரித்துக் கொண்டே போகிறதே! ஆக தன்னிறைவு என்பது முதலில் வரையறுக்கப்பட வேண்டும். அப்படியானால் தன்னிறைவு என்று தாங்கள் எதை சொல்கிறீர்கள்... என்று தயவு செய்து சொல்லுங்கள் உங்கள் கருத்துப்படி. இது பற்றிய கருத்துக்களை மற்றவர்களும் பதிவு செய்யலாமே.
@Shaik Mohamed Anas SAID: சகோதரருக்கு நன்றி! அடிப்படை தேவைகள் பூர்த்தி மற்றும் குடும்பத்தை சாதாரண முறையில் நடத்தகூடிய நிலையில் சேர்த்துவைத்துள்ள சொத்துக்களில் இருந்து கிடைக்ககூடிய வருமானம் - இதுதான் தன்னிறைவு என்பது என்னுடைய தாழ்மையான அபிப்ராயம். //சொந்த வீடு இருக்க, புதிய வீடு ஒன்று கட்டி வாடகைக்கு கொடுக்கும் எண்ணத்துடன் அல்லது பக்கத்து மனையை வழைத்துப் போடலாம் என்ற மனைவியின்/உறவுகளின் நச்சரிப்பினால் அல்லது ரியஸ் எஸ்டேட் கார்களின் திருகுதளத்திற்க்கு மயங்கி புதிய அட்வான்ஸ் கொடுப்பதாகட்டும்// இந்த மாதிரி நம்முடைய சக்திக்கு மீறி நினைத்து இறங்குவதுதான் நமது கஷ்டத்தின் முதல் படிக்கட்டு. சேமித்து வைத்து கொஞ்சம் கொஞ்சமாக நம்முடைய நிலைமையை உயர்த்துவதில் தவறில்லை - ஆனால் "நிதானம், பொறுமை மற்றும் விவேகம்" ரொம்ப முக்கியம். 'வரவு எட்டணா செலவு பத்தணா' கான்செப்டில் சிக்கிவிடக்கூடாது.
@Mohamed Faisel Said: முதலில் ஒவ்வொருவருக்கும் ஆடம்பரம் மற்றும் அத்தியாவசியத்திற்கான வித்தியாசம் தெரியவேண்டும். இது தெரியாததால் தான் பலரும் இன்று கஷ்டங்களுக்கு உள்ளாகிறோம். உதாரணத்திற்கு ஊரில் 5000 ரூபாய் சம்பளம் வாங்கி குடும்பத்தை ஓட்டிய ஒருவர் இங்கு வந்து 6 மாதமோ ஒரு வருடமோ ஆகும்போது 15000 ரூபாய் கொடுத்தாலும் அவரது குடும்பத்திற்கு அது போதுமானதாக இல்லை. கேட்டால், நாங்கள் என்ன ஆடம்பரம் அல்லது வீண் விரயம் செய்து விட்டோம் என்ற பதில் வரும்.
இவர்களின் அளவுகோல், இவர்களது நிலையை வைத்து இல்லாமல் அண்டை வீட்டார், உறவினர்கள் நிலைகளை அறிந்து இருப்பதாலேயே இவ்வாறு ஏற்படுகிறது. இன்றைக்கு சேமிப்பு என்பது இல்லாமல் ஆனதற்கு இதுவும் ஒரு காரணம். வருமானம் அதிகரிக்க அதிகரிக்க தேவைகளும் அதிகரிக்கிறது. தொலைக்காட்கிளிலும், பத்திரிகைகளிலும் வரும் விளம்பரங்களைப் பார்த்து தங்களுக்கு அதுவும் வேண்டும் என்ற (பேராசை) ஆசை எவ்வளவு தான் சம்பாதித்தாலும் சேமிக்க முடியாத நிலையை ஏற்படுத்துகிறது.
# a penny saved is a penny earned என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
@Baharuddin Mohamed Sainuddin said: //இவர்களின் அளவுகோல், இவர்களது நிலையை வைத்து இல்லாமல் அண்டை வீட்டார், உறவினர்கள் நிலைகளை அறிந்து இருப்பதாலேயே இவ்வாறு ஏற்படுகிறது.// நல்ல கருத்து.. உண்மையும் கூட.
@Shaik Mohamed Anas SAID://ஒவ்வொருவருக்கும் ஆடம்பரம் மற்றும் அத்தியாவசியத்திற்கான வித்தியாசம் தெரியவேண்டும்.// // இவர்களின் அளவுகோல், இவர்களது நிலையை வைத்து இல்லாமல் அண்டை வீட்டார், உறவினர்கள் நிலைகளை அறிந்து இருப்பதாலேயே இவ்வாறு ஏற்படுகிறது.// அருமை மற்றும் நிதர்சனமான உண்மையும் கூட!!!
@Baharuddin Mohamed Sainuddin said: இது விசயத்தில் ஆண்களைவிட சிந்திக்க வேண்டியது பெண்களே! அது விசயத்தில் ஆடம்பரத்தை பேணும் பெண்களும், சில விசயங்களில் ஆண்களும், நம்மில் அல்லது அண்டை வீட்டார் எத்தனையோ பேர் எழிமையாக வாழ்க்கை நடத்துகிறார்கள் அவரகளைப் போல் எழிமையாக வாழவேண்டும் என்று அடம் பிடிப்பதில்லை என்பது ஆச்சரியமான விசயம்.
@Mohamed Faisel said:ஊரில் செட்டில் ஆக பயப்பட ஒரு முக்கியமான காரணம், இது வரை வாழ்ந்து வந்த (ஆடம்பர அல்லது வசதிமிக்க) வாழ்க்கையை (கொஞ்ச நாட்களேனும்) விட்டுக் கொடுக்க மனம் வராரது தான். இங்கு வாழும்போது, பொருளாதாரம் கொஞ்சம் நல்ல நிலையில் இருப்பதால், உணவு, உடை இன்ன பிற செலவுகளில் தாராளத் தன்மை இருக்கும். தரம், விலை இவற்றில் கொஞ்சம் கூடுதலானவற்றையே உபயோகிக்கும் நிலை இருக்கும்.
ஆனால், ஊரில் செட்டில் ஆனால் முதலிலேயே இதே நிலையை தொடர முடியாது என்பது உண்மை. ஒரு வியாபாரம் ஆரம்பித்தால், அது ஒரு ஸ்திரத்தன்மை வரும் வரை பல விஷயங்களை தியாகம் செய்ய வேண்டி வரும். ஆனால், நாம் அதற்கு முன்வருவோமா? அப்படி நாம் தான் முன்வந்தாலும் நம் குடும்பத்தினர் முன்வருவார்களா? அதையும் விட பெரிய விஷயம் ஊர் காரர்களின் பேச்சுகள். உலை வாயை மூடலாம், ஊர் வாயை மூட முடியுமா? இவையெல்லாம் ஒரு முக்கியமான காரணம்.
(வரவேழ்ப்பு என்ற மலையாள திரைப்படம் நிறைய தகவல்களை தரும்)
ஆனால், இவற்றை நாம் ஒரு பொருட்டாக மதிக்காமல், நெஞ்சுறுதியும், நல்ல செயல் திட்டத்துடனும் இருந்தால் நல்ல நிலையில் ஊரிலேயே சம்பாதிக்கலாம். கடந்த முறை நான் ஊர் சென்ற போது இது குறித்து சில அலசல்களை செய்தேன்... நிச்சயமாக, நல்ல வருமானம் ஈட்டக்கூடிய ஏராளமான வழிகள் ஊரிலேயே இருக்கின்றது என்பதை அறிந்தும் கொண்டேன்
No comments:
Post a Comment