Pages

Tuesday, April 10, 2012

வெளிநாடுவாழ் சகோதரர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்..! சகோ. அபுரய்யான்


அன்பு சகோதரர்களே..!!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ..!!

வெளிநாடுகளில் வாழும் நாம் சாதிப்பதை விட அல்லது சம்பாதிப்பதைவிட, நாம் இழப்பது நம் வாழ்வின் உன்னதமானபல விஷயங்களை, பல சந்தர்பங்களை குடும்பத்தை விட்டு இங்கு வந்து தனிமையில் வாடும் இதயங்கள் பல, இதை சொல்லும்போது பலரின் பதில் "குடும்பத்தை" கொண்டு வந்துர வேண்டிய தானே, ஆக நம் பார்வையில் "குடும்பம்" என்பது மனைவி, மக்கள் என்ற ஒரு சின்ன வட்டத்துக்குள் ஒதுங்கிவிட்டது ஆனால் உணமையில் குடும்பம் என்பது தாய் தந்தை சகோதர சகோதரிகள் என்று பறந்து விரிந்த ஒரு பொக்கிஷம்


நாம் எல்லோரும் நம்முடைய குடும்பநலத்திற்காக தான் வெளிநாடு வருகிறோம் ஒன்றன் பின் ஒன்றாக வாழ்வின் தேவைகள் பெருக பெருக வெளிநாட்டில் நம் அஸ்திவாரம் வலுபெருகிறது ஒரு கட்டத்தில் பெயர்த்தெடுக்க முடியாத அளவு மிக வலுவானதாகி விடுகிறது, தேவைக்கு சம்பாதிக்க வந்தவர்கள் பழகிப்போன வாழ்கை தரத்தை நிலைநிறுத்த இங்கயே கூடாரம் அமைத்து குடியேறி விடுகின்றனர்

ஊரில் போய் ஏதாவது சுயதொழில் செய்து சம்பாதிக்கலாம் என்று செல்கின்றவர்கள் சரியான அனுபவம் இல்லாமல் அல்லது யாரிடமும் கலந்தாலோசிக்காமல் எதையாவது செய்து கடன்பட்டு மீண்டும் கடல் தாண்ட வேண்டியதாக உள்ளது

இந்த நிலை மாற, ஊரில் போய் வெற்றிகரமாக வாழ்வது எப்படி என்பது குறித்து நல்ல தகவல்கள், ஆலோசனைகள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து பிறர் பயன்பெற உதவிசெய்ய சகோதரர்களை கேட்டுகொள்கிறேன்

தயவு செய்து அரசியல், கொள்கை, இயக்கங்கள் பற்றிய பதிவுகளை செய்து இந்த குழுமத்தை போர்களமாக்கி விடாதீர்கள் என்று அன்பாய் கேட்டுகொள்கிறேன்

வெளிநாடுவாழ் சகோதரர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்..!!!

- அபு ரய்யான்

No comments:

Post a Comment