இன்றைக்கு பலர் ஊரில் போய் செட்டில் ஆவதற்கு தயங்க இன்னொரு முக்கியமான காரணம் உறவினர்கள். இவர்கள் 'முடித்து'க் கொண்டு வருகிறார்கள் என்றவுடன் 'இழவு' விழுந்தது போல பதறுகிறார்கள். அதற்கான காரணம் அவர்கள் புறமிருந்து உள்ளதை ஏற்கனவே பார்த்தோம்.
இன்னொரு முக்கியமான காரணம் யார் என்றால், அது வெளிநாட்டில் வாழும் நம்மைப் போன்றோர்தான். நம்மில் பலருடைய குடும்பத்தினருக்கு (பெரும்பாலன கேஸ்களில் மனைவிக்குக் கூட) நாம் என்ன வேலை செய்கிறோம், இங்கு படும் அவலங்கள் என்ன என்பன, சம்பளம், கம்பெனி நிலைமை போன்றவை தெரியாது.
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஊருக்குச் செல்லும்போது 10 ரியால் கடையில் போய் 'அள்ளி'க் கொண்டு போவதை வைத்தக்கொண்டு பண்ணுகிற அலம்பல்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
நமது மாவட்டத்தைச் சார்ந்த ஒருவர் இங்கு கட்டட வேலை செய்து வந்தார் (பெயரும், ஊரும் வேண்டாம்). அவருடைய அறையில் 8 பேர் உண்டு. மிக மிக கடுமையான வேலை. சந்திக்கச் செல்லும்போது சட்டை கூட போடாமல் வெளியில் 'பீடி'யை பற்ற வைத்தக்கொண்டு நடந்துகொண்டே யிருப்பார். அவ்வளவு கடுமையான வேலை. குறைவான சம்பளம், போதிய உணவு கிடையாது. ஆனால், அதே நபர் ஊருக்குச் செல்லும்போது கடன் வாங்கி ஒரு தங்க செயின் வாங்கினார். கோல்டு வாட்ச் வாங்கினார். பாக்கெட் பாக்கெட்டாக சிகரெட் வாங்கினார். நிறைய ஸ்பிரே வாங்கினார்.
ஊருக்குப் போய்விட்டு வந்தபோது அவர் நின்ற இரண்டு மாதங்களும் அவர் எங்கே சென்றாலும் அந்த தங்கச் செயினையும், வாட்ச்சையும் அணிந்து கொண்டுதான் சென்றிருக்கிறார். இங்கு பீடி குடித்தவர் அங்கு சிகரெட் தான். இதை பார்க்கும் அவரது குடும்பத்தினர் என்ன நினைப்பார்கள்? தனது கணவன் அல்லது மகன் வெளிநாட்டிலும் இதே போன்றுதான் வாழ்ந்து வருவதாகத்தானே நினைப்பார்கள்? இப்போது சொல்வோம் யார் மீது தவறு?
அதே போல இன்னொருவர், வயதான காலத்திலும் மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதித்தார். அடிக்கடி அவரை சந்திப்பதுண்டு. அவருடைய வேலை கஷ்டங்களும், அவருடைய சூழ்நிலைகளும், 'பாரை'களும் நன்கு தெரியும். ஆனால், ஊருக்கு வந்தபோது பார்த்த போது கல்லூரியில் படிக்கும் அவருடைய மகன் டூவீலரை வைத்துக்கொண்டு பண்ணுகிற பந்தா.. உண்மையிலேயே அவனுடைய தந்தையின் சூழ்நிலையை அவன் அறிந்திருந்தால் கண்டிப்பாக அவன் அவ்வாறு செய்ய மாட்டான் என்பது தான் என்னுடைய கணிப்பாக இருந்தது.
இப்போது சொல்வோம்? தவறு எங்கே இருந்து ஆரம்பமாகிறது?

No comments:
Post a Comment