Pages

Tuesday, April 10, 2012

வெளிநாட்டு மோகம் ஒழியட்டும்.... சகோ. முஹம்மது யூசுஃப்


எல்லா சகோதரர்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு...

முதலில் எல்லாம் வல்ல அல்லாஹ்வை புகழ்ந்தவனாக, அவனது சாந்தியும், சமாதானமும் நபியே கரீம் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தார் மீதும், சத்திய சஹாபாக்கள் மீதும் மற்றும் நம் எல்லோர் மீதும் உண்டாகட்டுமாக என்று பிரார்த்தித்தவனாக ஆரம்பம் செய்கின்றேன்.

சகோதரர் பகருதின் முஹம்மது அவர்கள் சொன்னதுபோல் எல்லோருக்கும் ஊரில் போயி செட்லே ஆவனும்னு ஒரு நிய்யத்து உண்டு.

ஆனாலும் மணமும், பணமும் இடம் கொடுப்பதில்லை.



இங்கு எனது அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ள ஆசை படுகின்றேன். நானும் 15 வருட காலமாக (1995 to 2000 உகாண்டா, 2001 to 2010 கென்யா) வெளிநாடுவாசியாக இருந்து, கழிந்த 18 மாதங்களாகத்தான் ஊரில் வசித்து வருகின்றேன். முதலில் நம்முடைய நிலைய்மய்யை இஸ்லாமிய வட்டத்தில் இருந்து பார்க்க வேண்டும். நாம் வெளிநாட்டில் இருப்பதால் நாம் மறுமைக்காக இழப்பது என்னெவென்று? நீங்கள் கேட்கலாம் என்னாப்பா நீயும் 15 வருடமாக வெளியே இருந்தவன் தானே என்று, அதை நான் மறுக்கவில்லை. நான் இப்போது உணர்கின்றேன் அல்லாஹ் நம்மை இப்பவாவது ஊரில் கொண்டு சேர்தானே என்று. முதலில் நமது பெற்றோருக்கு செய்யும் கடமை. நம்மில் பலர் நினைக்கின்றோம். 
நாமதான் மாத, மாதம் தவறாம பணம் அனுப்புகின்றோமே என்று. எனது வீட்டிலும் நான் எப்போதெல்லாம் ஊருக்கு வாரேன்னு சொல்லும் போதெல்லாம் பயங்கர எதிர்ப்பு. பெற்றோர் சொல்வார்கள், உனக்கு குழந்தைகள் இருக்கு, உனது எதிர்க்காலம் முக்கியம், அது, இது என்று. எனது மனைவியும் பயங்கர எதிர்ப்பு. நான் சிலருடைய விசயங்களை நேரில் பார்த்தேன் 3 வருடமாக எனது நண்பர் ஒருவர் ஊர் போகாமல் இருந்தார். அவர் 3 வருடம் கழித்து ஊர் போக டிக்கட் போட்டார், ஆனால் அவர் டிக்கெட் போட்ட தேதிக்கு முன்பாக அலாஹ் அவருடைய வாப்பாவுக்கு டிக்கெட் போட்டிட்டான். அவர் வரும் ஒரு வாரமும்பாக அவரது வாப்பா வபாதானார்கள். 
அந்த நண்பர் அவசர, அவசரமாக ஊர் வந்தார் வாப்பாவின் மையத்தை பார்க்க. நானும் அந்த சமயத்தில் ஊரிலிருந்ததால், அவருடைய ஊரான மதுரை சென்றிருந்தான். காரிலிருந்து இறங்கிய மனிதர் ஓடி சென்று தனது வாப்பாவின் மையது மீது கடந்து கண்ணீர் விட்டது இன்னும் எனக்கு ஞாபகம் உண்டு. மற்றொரு நண்பர் அவசரமாக தனது உம்மா ICU இல் உள்ளார் என்று கேள்விப் பட்டு வந்தார், 2 நாட்கள் கழித்து அவர்கள் மரணித்தார்கள். இன்னும் எவ்வளவோ சம்பவங்கள் நீங்களும் கேள்விப் பட்டிருக்கலாம். இங்கு நாம் எதற்க்கு முக்கியத்துவம் கொடுப்பது?

பணமா, பாசமா?

இரண்டாவது, நாம் பலவருடங்களாக, சொகுசாக வாழ்ந்த இடத்தை விட்டு விட்டு இந்தியாவில் வந்து குடியேறுவது என்பது இலகுவான விசயமும் கிடையாது. ஆப்ரிகா உலகின் இருண்ட கண்டம்னு சொன்னாலும், நமக்கு வெளிச்சம் கிடைத்தது அங்கு தான். மத ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும். அல்ஹம்துலில்லாஹ். அங்கு எந்த அளவுக்கு இலகுவான வாழ்க்கை என்றால், நமது உள்ளாடையை துவைத்து போட கூட ஆள் கிடைக்கும். அந்த மாதிரியான் இலகுவான வாழ்க்கை விட்டு விட்டு ஊர் வருவது என்பது மிக கடினமானதொன்று. எல்லாத்துக்கும் மேலாக நமது மனைவியின் ஒத்துழைப்பும் முக்கியம். குழந்தைகளும் சில சமயங்களின் என்னிடம் கோபப்பட்டதுண்டு, அழகான இடம் கென்யா, அதவிட்டுட்டு இங்க வந்திட்டீங்களேன்னு. வீட்டில காரில்லை, AC இல்லை அது, இதுன்னு ரொம்பவே கஷ்டம், இப்பம் கரண்டும் இல்லை.

ஊரில் வரும்போது நான் எந்த முன்னேர்ப்பாடோடும், எந்த பெரிய தொகய்யோடும் வரவில்லை. பெற்றோரோடு இருக்க வேண்டும் என்ற முக்கிய எண்ணத்தோடு மட்டுமே வந்தேன். அல்ஹம்துலில்லாஹ் அந்த விசயத்தில் மிக திருப்தி.

இப்பம் நீங்க கேட்கலாம், பணத்துக்கு என்ன செய்வது என்று. அல்ஹம்துலில்லாஹ் நமதூரில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறது. ஆனால் நம்மாளுங்கள் கொஞ்சம் பொறுமையை இருப்பதில்லை. 3 மாதம் பார்ப்பார்கள், வியாபாரம் சரியில்லைன்னு சொல்லி மூடி விடுவார்கள். அதே இடத்தில, அதே வியாபாரத்தை வேற மக்கள் நல்லபடியாக நடத்துவதையும் பார்த்துள்ளோம்.

இன்ஷா அல்லாஹ் முதலில் நிய்யத்து வையுங்கள், அல்லாஹ் நல்லதொரு வழியை காண்பிப்பான். கொஞ்சம் பொறுமையும், ஓரளவுக்கு பொருளாதாரமும், நல்ல திட்டமிடுதலும் இருந்தால் இங்கும் இலட்சங்கள் ஈட்டலாம். நம்மை சுற்றி எவ்வளவோ சமுதாயம் உள்ளது, கணக்கிட்டுப் பார்த்தல் மிக சொற்ப்பமானவர்களே வெளிநாடு செல்கின்றனர். பெரும்பாலானவர்கள் இங்கே பொருள் ஈட்டி சந்தோசமாக உள்ளனர். நமது சமுதாயம் PASSPORT சமுதாயமாகவே மாறிவிட்டது. இன்ஷா அல்லாஹ் இந்த வெளிநாட்டு மோகத்தை சிறிது, சிறிதாக மாற்ற வேண்டும். இதனால் ஏற்ப்படும் இழப்புகளை இங்கு கொட்டுவது என்பது மிக கடினம்.
 IAS படிப்புக்காக ஒரு செமினார் நடத்தினோம், கிட்டத்தட்ட எல்லா ஜமாதுக்கும் சென்று அழைப்பு விடுத்தோம், ஜூம்மாவில் இதனுடைய முக்கியத்துவம் சொல்லப்பட்டது, எல்லாம் செய்தும் வெறும் 20 மாணவர்கள்தான் அங்கு வந்தார்கள். ஹிமாச்சல் பிரதேசத்தில் IAS ஆக உள்ள, தமிழகத்தை சார்ந்த சகோதரர் நசீம் அவர்களும் நமதூரை சார்ந்த சகோதரர் முபாரக் IFS அவர்களும் மிக கவலை கொண்டனர். படித்தவர்கள் அதிகமானவர்கள் உள்ள இந்த மாவட்டத்தில் வெறும் 20 மாணவர்களுக்குதான் IAS , IPS , IPS போன்றவற்றின் முக்கியத்துவம் தெரிகறதா என்று. இப்போது காவல்துறையில் SI க்கான தேர்வு நடை பெறுகிறது. நம்ம மக்கள் யாருமே செல்லவில்லை என்பது கவலையான விஷயம்.

இந்த வெளிநாட்டு மோகம் ஒழியட்டும், நமது நாட்டில் நமது பெற்றோர், சொந்தங்கள், நண்பர்களோடு இருந்து பொருள் ஈட்டும் பாக்கியத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் தருவானாக.

அபிவிருத்தி என்பது இலட்சங்கள் அல்ல, சிறிது பணம் கிடைத்தாலும் அதில் மனஅமைதி பெறுவதே. இன்ஷா அல்லாஹ் மனது வையுங்கள், எல்லாம் வல்ல அல்லாஹ் நல் வழியை காட்டுவான்.

1 comment:

  1. very usefull and encouraging points brother yousuf - abu rayyan

    ReplyDelete