அத்தியாயம் - மூன்று
*****************************
இதை நான் தொடராக எழுதவில்லை. என் கருத்தை சொல்லிவைக்கலாம் என்றுதான் ஆரம்பித்தேன். நண்பர்கள் பலர் அதை தொடர் என்று எண்ணி நிறைய எதிர்பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது.அவர்கள் வேதனையின் உச்சமும் தெரிகிறது. வறுமை,வேதனை மற்றும் இக்கட்டுகளில் இருந்து விடுபட முடியாத ஏராளமான இளகிய உள்ளங்கள் வெயில் தேசத்தின்
பாலை அடுப்புகளுக்கு விறகாகிக் கொண்டிருப்பதை நான் அறிவேன். தங்கள் துன்பங்களை துயரங்களை நம்மில் ஒருவர் பகிர்ந்து கொள்கிறார் என்பதை
எண்ணி அவர்களுக்கு ஒரு நெகிழ்ச்சியும் ஆறுதலும் ஏற்படுகிறது.அந்தத் துன்பங்களை அனுபவித்த அனுபவசாலிகளில் நானும் ஒருவன் என்பதால்
சகோதரர்களின் இன்பதுன்பங்களை அவர்களோடு பகிர்வதில் எனக்கும் ஒரு ஆறுதல்தான்.

துன்பங்களைக்கூட அதை அனுபவிக்கும்போது அவ்வளவாகத் தெரியாது .
சுட்டெரிக்கும் வெயிலில் நடந்துவந்து ஒரு நிழலைத்தேடி அதில் இளைப்பாறும் போதுதான் கடந்துவந்த பாதையும் காலில் உள்ள கொப்புளங்களும் கண்ணுக்குத் தெரியும்.
தொண்டை வறண்டு, விம்மல்களை விழுங்கியே தாகத்தைத் தனித்துக் கொண்ட அந்த வேதனைகளை பெற்றோருக்கும் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் சொல்லாமல் தன் நெஞ்சில் வைத்து வெந்து கொண்டிருப்பான் அந்தக் குடும்பத் தலைவன். இந்த மனித எரிமலை குமுறிக் கொண்டிருக்குமேத் தவிர எப்போதுமே வெடிக்காது.
என்னைக் கேட்டால், பத்து மாதம் சுமந்து பெறுகின்ற தாயின் சுமையைவிட பெற்றோர் மனைவி மக்களை வாழ்நாள் முழுவதும் சுமக்கின்றானே ஒரு குடும்பத் தலைவன். அவன் சுமை உயர்வானது. விலை மதிப்பில்லாதது. எதைக் கொண்டும் எடைபோட முடியாத தியாகத்தின் வடு அது. அந்த தியாகத்தின் வடுவைத்தான் நீங்கள் சுமந்து கொண்டிருக்கிறீர்கள். அது "பாரத ரத்னா" அவார்டைவிட மதிப்புமிக்கது.வெளிநாட்டு வேலை - வறுமைக்கும் வாழ்வுக்கும் இடையே நடக்கும் சமர் !களத்தில் நிற்பவனுக்கு வெற்றி மட்டுமே குறிக்கோளாக இருக்க முடியும்! அவன் வீசுகின்ற ஒவ்வொரு வீச்சும் வறுமையை வீழ்த்தும்! அவன் வீட்டுக்கு வெற்றியைச் சேர்க்கும்!
காதலும் காமமும் இல்லாமல் வாழ்க்கை இல்லைதான்... ஆனால் காதலையும் காமத்தையும் இரு கோப்பைகளில் எடுத்து வந்து "காதலாய் கசிந்துருகி" இன்ப ரசத்தில் மூழ்கிக் கிடந்தவர்கள் வாழ்ந்ததும் தெரியவில்லை..வீழ்ந்ததும் தெரியவில்லை. ஆனால் அவற்றை "டானிக்"கைபோல் பருகிவிட்டு களத்துக்கு ஓடியவர்களின் வாழ்வை வரலாறு சொல்கிறது.
விலைபேச முடியாத தியாகத்தைத்தான் வெளிநாட்டில் வாழும் அன்பு
சகோதரர்கள் செய்து வருகிறீர்கள். இதன் அருமை இப்போது தெரியாவிட்டாலும் " நான் பெற்ற பிள்ளை என்னைப்போல் கஷ்டப்படாமல் நல்லா இருக்கான்.... படைச்ச ரகுமானே என் பிள்ளையை மேலும் மேலும் நல்லாக்கி வை..." என்று வாழ்வின் கடைசி நாட்களை நிம்மதியாக வாழ்ந்துஉங்களுக்காக துஆ கேட்கிறார்களே.... உங்கள் பெற்றோர், அதன் பலன் மறுமையில் தெரியும்.

"எங்க வாப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு என்னை ஆளாக்கி விட்டாங்க...அவங்க எப்போதும் கண் கலங்காம வாழணும்.." என்று உங்கள் மகனும் " என் செல்ல வாப்பா.... உங்களுக்கு என்ன வேணும்...." என்று கேட்டு தான் பெற்ற பிள்ளையை உங்கள் மடியில் தவழவிட்டு "இதுதான் அப்பா...(அப்பா - பாட்டா) ....அப்பாக்கு முத்தம் கொடு..." என்று உங்கள் அன்பு மகளும் உங்களைச் சூழ இருந்து வாழும்போது உங்கள் உழைப்பின் உங்கள் தியாகத்தின் "ருசி" உங்களுக்குத் தெரியும்.
( இன்ஷா அல்லா நேரமும் மின்சாரமும் இருக்கும்போது தொடர்வேன்...)
( இன்ஷா அல்லா நேரமும் மின்சாரமும் இருக்கும்போது தொடர்வேன்...)
மிக தெளிவான ஆய்வு கட்டுரை , தொடருங்கள்... - அபு ரய்யான்
ReplyDelete